செய்திக்குறிப்பு: கொரோனா நெருக்கடியால் தாயகம் வர விரும்பும் வெளிநாடு வாழ் தமிழர்களை அரசு செலவில் அழைத்து வரக்கோரி சீமான் பதாகை ஏந்தி போராட்டம் | நாம் தமிழர் கட்சி
வெளி நாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்று பணிபுரிந்து வரும் தமிழர்கள் அங்கு நிலவிவரும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்றுமாத காலமாக வருமானம் இன்றியும் தாயகம் திரும்ப முடியாமலும் சிக்கித்தவித்து வருகின்றனர். தாயகம் திரும்பி வர விரும்பும் தமிழர்களை விரைந்து மீட்கும் நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
கடந்த மூன்று மாதமாக வேலை, வருமானம் இல்லாது உணவுக்கே வழியின்றி தவித்து வருபவர்கள் பயணக் கட்டணம் செலுத்தி தாயகம் திரும்வது இயலாத காரியம். எனவே மத்திய-மாநில அரசுகள் உடனடியாக இதில் கவனமெடுத்து முழு செலவையும் அரசே ஏற்றுக்கொண்டு அவர்களை உடனடியாக தமிழகத்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி அவர்கள் இன்று முன்னெடுத்த பதாகை ஏந்தும் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆதரவு தெரிவித்து பதாகை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084