பெருந்தமிழர் சம்புலிங்கனாருக்கு புகழ்வணக்கம் – நெய்வேலி

54

1934 ஆம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தில் ஆழ்துளாய் கிணறு தோண்டியபோது வந்த வந்த கரிய நீரினை அன்றைய ஆங்கிலயே புவியியல் துறைக்கு அறிவித்து அதன் பயனாய் நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விடுதலைக்கு பிறகு முதல்வர் காமராசர் மூலம் பிரதமர் நேருவிடம் பேசி நெய்வேலி நிலக்கரி சுரங்கம் அமைய தனக்கு சொந்தமான 600 ஏக்கர் நிலத்தினை அள்ளி தந்த வள்ளல் “பெருந்தமிழர் மாசிலாமணி ஜம்புலிங்கனாரின்” 130 வது ஆண்டு பிறந்த தினத்தை (22- 06-2020) முன்னிட்டு நாம் தமிழர் கட்சி உறவுகள் நெய்வேலி நகரில் அமைந்துள்ள நம் பாட்டனாரின் சிலைக்கு இன்று காலை புகழ் வணக்கம் செய்தனர்.

திருட்டு திராவிட அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஊழலில் திளைத்து கோடியில் புரள.. சொந்த நிலத்தை இலவசமாக அளித்தவரின் பிள்ளைகளோ இன்று வறுமை தாங்காமல் அதே நிறுவனத்தினிடம் வேலை கேட்டு கையேந்தி நிற்கும் அவலம் நிகழ்கிறது.தமிழர் காலம் ஒன்று உருவாகும்போது
தியாகத்தமிழர் வாழ்வு மலரும் அப்போது..!