பண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

14

பண்ருட்டி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் 27.06.2020 சனிக்கிழமை மாலை 5.00 மணியளவில் கட்சி அலுவலகமான “நம்மாழ்வார் குடிலில்” நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் மற்றும் கடலூர் மாவட்ட செயலாளர் (கிழக்கு) சாமி ரவி ஆகியோர் பங்கேற்று கட்சியின் கட்டமைப்பு மற்றும் செயற்களம் செயல்பாடுகள் பற்றி விரிவாக பேசினார்கள். பண்ருட்டி தொகுதி செயலாளர் வெற்றிவேலன் மற்றும் பண்ருட்டி தொகுதியை சேர்ந்த நகர / ஒன்றிய பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :
1) பண்ருட்டி வட்ட பகுதிகளில் விளை நிலங்களில் சவுடு மணல் என்ற பெயரில் அனுமதி பெற்று விதிகளை மீறி 30 அடி வரை மணல் அள்ளி வருகின்றனர்.இதனால் நீர்மட்டம் குறைந்து போகும் ஆபத்து உள்ளது. இது தொடர்பாக வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் வரை கோரிக்கை மனு அனுப்பியும் இது வரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இதனை கண்டித்து அடுத்த மாதம் (ஜூலை) 6 அல்லது 7 தேதியில் மணல் அள்ளும் இடத்தை முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி பின்பற்றி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

2) விளை நிலங்களில் மணல் கொள்ளையை கண்டித்து முற்றுகை போராட்டத்துக்கு சுவரொட்டி மற்றும் துண்டறிக்கை அடித்து மக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் போராட்ட நோக்கத்தை கொண்டு சேர்ப்பது எனவும்

3) கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் இந்த நேரத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய கபசுர குடிநீர் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்களுக்கு கொடுப்பதென முடிவு செய்யப்பட்டது.

பதிவு : அ. வெற்றிவேலன், பண்ருட்டி தொகுதி செயலாளர். தொடர்புக்கு : 9345617522