திருச்சி தில்லைநகர் பஜாஜ் பைனான்ஸ் நிதி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் கொரோனா தொற்றால் ஊரடங்கு இருந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்திலும் அரசு ஆணையை மீறி மாத தவணைப்பிடித்தம் அதற்கு வட்டி, காசாலை தண்டம் என அடாவடியாக மனிதாபிமானமற்று செயல்பட்டு வந்தது. அதை எதிர்த்து திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திரு. இரா. பிரபு தலைமையில் திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி உறவுகள் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பல வாடிக்கையாளர்களும் நாம் தமிழர் நடத்திய போராட்டத்தில் இணைந்துக் கொண்டனர்.