சாத்தான்குளம்இரட்டை கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் – கொடைக்கானல்

20

*நாம்தமிழர் கட்சிபழனி சட்டமன்ற தொகுதியின்செய்தி குறிப்பு:*

27/06/2020 சனி ஆகிய இன்று சாத்தான்குளத்தில் காவல்துறை நிகழ்த்திய இரட்டை படுகொலையை கண்டித்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கி கொலை செய்த அந்த காவல் துணை ஆய்வாளர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரியும் கொடைக்கானல் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று கொடைக்கானலில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் நகர செயலாளர்: ராஜ்குமார் அவர்கள் தலைமை ஏற்று
இக்கூட்டத்திற்கு தொகுதி தலைவர் ஆண்டோ பிரபு அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பாக நடத்தி தந்தனர்
மேலும் பழனி தொகுதி தொழிற்சங்க தலைவர் முஹம்மது ரஜாக் கண்டன முழக்கம் எழுப்பினார்.

இளைஞர் பாசறை செயலாளர் ஆசிக் மற்றும் நகர பொருளாளர் மைக்கேல் மற்றும் அணைத்து நிலை பொறுப்பாளர்கள் நமது கட்சி உறவுகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்து தந்தனர்.
நாம்தமிழர்!

தொகுதிசெய்தி தொடர்பாளர்,
நாம் தமிழர் கட்சி,பழநி.
9940782400
www.seyarkalam.naamtamilar.org

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”