காவல் நிலையத்தில் பஜாஜ் பைனான்ஸ் மேலாளரிடம் உறுதி மொழி படிவம் பெறப்பட்டது.

42

01.06.2020 பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் கொரோனா ஊரடங்கு மாதங்களிலும் மாத தவணை மற்றும் காசோலை திருப்புதல் தண்டம் என பல வழியிலும் பொது மக்கள் வாங்கிய கடனுக்கு துன்புறுத்தப்படுவதை கண்டித்து முற்றுகை போராட்டம் திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் இரா. பிரபு அவர்கள் தலைமையில் திருச்சி கிழக்கு நாம் தமிழர் கட்சியினரால் பஜாஜ் பைனான்ஸ் திருச்சி தில்லைநகர் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 02.06.2020 அன்று தில்லைநகர் காவல் நிலையத்தில் பஜாஜ் பைனான்ஸ் மேலாளர் ஜூன், ஜூலை,ஆக்ஸ்ட் மாத தவணை கேட்கப்படாது, ஏற்கனவே பிடித்தம் செய்த தொகை ஏப்ரல் மே மாதத்திற்கு வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிப்பதாக உறுதியளித்து படிவம் தந்தார்.நாம் தமிழர் கட்சியினர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் வெற்றிப்பெற்றது.