ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி கரூர் மேற்கு மாவட்டம்

5

30.4.2020) கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ராயனூர் ஈழத்தமிழர் மறுவாழ்வு குடியிருப்பு பகுதியிலுள்ள நமது 440 ஈழத்தமிழர் குடும்ப உறவுகளுக்கும் 2.25 டன் அரிசி, 225 கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் நன்மாறன் அவர்கள், கரூர் சட்டமன்ற தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் அண்ணன் பாலாஜி காந்தி அவர்கள்,  கரூர் தொகுதி இணைச் செயலாளர் அண்ணன் சரவணன் அவர்கள், கிருஷ்ணராயபுரம் தொகுதி வழக்கறிஞர் பாசறை செயலாளர் அண்ணன் பார்த்திபன் அவர்கள், கரூர் நகரம் அண்ணன் சேகர் அவர்கள், தொகுதி இளைஞர் பாசறை இணை செயலாளர் சூர்யா அவர்கள், மாணவர் பாசறை தம்பி ஆதவன், சகோ ரூபன், வழக்கறிஞர் சகோ பிரதீப் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.