கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு- அவினாசி வீரத்தமிழர் முன்னணி

49
திருப்பூர் வடக்கு மாவட்ட அவினாசி தொகுதியின் நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி
அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தையில், (06/4/2020)முதல் நாள் கபசுரக்குடிநீர் வினியோகம் நமது தொகுதியின் வீரத்தமிழர் முன்னணி செயலாளர் பா.வினாயகம் மூலமாக சிறப்பாக நடைபெற்றது.
இதில் பொதுமக்கள் சுமார் 500 நபர்களுக்கு மேல் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
(07/4/2020) இரண்டாவது நாளாக கபசுரக்குடிநீர்
அவிநாசி சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக, அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தை பகுதியில் நடைபெற்றது இதில்
600 நபர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.
(08/4/2020)அவிநாசி சட்டமன்ற தொகுதி வீரத்தமிழர் முன்னணியின் நிகழ்வான கபசுரக்குடிநீர் வினியோகம் மூன்றாவது நாளாக அவினாசி புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் சுமார் 550 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது
(09/4/2020) 4-வது நாள் கபசுரக்குடிநீர்
திருப்பூர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பாக,
அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தை,
அவிநாசி சந்தைப்பேட்டை,
அணைப்பதூர்,
திருமுருகன்பூண்டி,
அன்னூர் ஒன்றியம் ஆத்திகுட்டை கிராமம் உள்ளிட்ட 5 பகுதிகளில் காலை 6.00 மணி முதல் 9.00 மணி அவரை சிறப்பான முறையில் நடைபெற்றது.
மொத்தமாக சுமார் 1600 நபர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

(10/4/2020)முக்கியமாக கொரோனா வைரஸ் பாதிப்பு பகுதியாக அவினாசியில் அரசு கொடுத்த வரைபடத்தில் வரும் அவிநாசி நகர பகுதிகளான அவிநாசி புதியபேருந்து நிலைய காய்கறி சந்தையில்

5-வது நாளாக அவிநாசி வீரத்தமிழர் முன்னணியின் சார்பாக 500 நபர்களுக்கும்….
2-வது நாளாக அணைபுதூர் பகுதியில் 450 நபர்களுக்கும்….
2-வது நாளாக நமது ஈழ தமிழர்கள் உறவுகள் குடியிருப்பு பகுதியான அவினாசி வாரச்சந்தை பகுதியில் 250 நபர்களுக்கும்….
2-வது நாளாக திருமுருகன்பூண்டி பகுதியில் 400 நபர்களுக்கும்

காலை 6.30 மணி முதல் 10 மணி வரை கபசுர குடிநீர் வழங்கும் நேரம்)

மேலும் முதல் நாளாக கருவலூர் பகுதியில் சுமார் 500 நபர்களுக்கு என மொத்தமாக சுமார் 2100 நபர்களுக்கு அதிகமாகவும் (வீடுகளில் உள்ளோர்க்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
(11/4/2020)தொடர்ச்சியாக 6-வது நாள் கபசுர குடிநீர் வினியோகம்…..
திருப்பூர் வடக்கு மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக
6-வது நாளாக அவிநாசி புதிய பேருந்து நிலையம் புதிய காய்கறி சந்தை பகுதி….
3-வது நாளாக அவிநாசி வாரச்சந்தை ஈழத்தமிழர் குடியிருப்பு பகுதி….
3-வது நாளாக திருமுருகன்பூண்டி பகுதி….
2-வது நாளாக கருவலூர் நகர பகுதியில் பொது மக்களுக்கு

சுமார் 1000 நபர்களுக்கு என மேற்படி 5 பகுதிகளிலும் காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையும் கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சுமார் 2200 நபர்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
மேற்படியான ஆறு நிகழ்வுகளின் அடிப்படையில் சுமார் 7550 பொதுமக்களுக்கு இதுவரையும் (06/4/2020 முதல் 11/4/2020 வரை) அவினாசி தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக கபசுரக்குடிநீர் வினியோகிக்கப்பட்டுள்ளது

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்-அரக்கோணம்
அடுத்த செய்திகொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக் குடிநீர் வழங்குதல்- துறைமுகம்