சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றியம் வடகுடி ஊராட்சிக்கு உட்பட்ட கருவியபட்டி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 8 மாதங்களுக்கு முன்பு 2019 ஆகஸ்ட்-ல் நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் தண்ணீர் தொட்டி கட்டிக் கொடுக்கப்பட்டு ஊராட்சி சார்பில் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்
ஆனால் தற்போது ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்றுள்ள பாலசுப்பிரமணியம் என்பவர் தனக்கு தொட்டியின் வண்ணம் பிடிக்கவில்லை என்று கூறி தண்ணீர் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனையடுத்து நாம் தமிழர் கட்சியின் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர்கள் கரு.சாயல்ராம் அவர்கள் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இணைந்து சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார அலுவலரிடம் புகார் மனு அளிக்க சென்றனர். அங்கு அதிகாரி இல்லாததால் சாக்கோட்டை ஒன்றியக்குழுத் தலைவர் சரண்யா செந்தில்குமாரிடம் அவர்களிடம் புகார் மனு அளித்தனர்.
பின்னர் மனுவைப் பெற்றுக் கொண்டு விசாரணை செய்து உடனடியாக தண்ணீர் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி உறுதி அளித்தனர். ஊர் பொதுமக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு நன்றிகளை தெரிவித்தனர் இது போன்ற கீழ்த்தரமான செயலை செய்த ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்ரமணியம் அவர்களை நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் தனது கண்டனத்தை பதிவு செய்தது மேலும் உடனே இணைப்பு வழங்க உத்தரவுயிட்ட ஒன்றிய குழுத்தலைவர் சரண்யா செந்தில்குமார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்டம் சார்பாக நன்றிகளை தெரிவித்தனர்.