#JNUattack
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்டப் பெரும் தலைகுனிவாகும்.
விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச்சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராகக்களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல்; அச்சுறுத்தல்!
தாக்குதலில் ஈடுபட்டக் கொடுங்கோலர்களை உடனடியாகக் கடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
– சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூகவிரோதிகள் மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.#JNUattack
— சீமான் (@SeemanOfficial) January 6, 2020