க.எண்: 2020010006
நாள்: 08.01.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கொளத்தூர், திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி
நமது கட்சியின் உட்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு, மாவட்டவாரியாக அனைத்துநிலைப் பொறுப்பாளர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்குட்பட்ட கொளத்தூர், திரு.வி.க. நகர் மற்றும் அம்பத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு வருகின்ற 11-01-2020 சனிக்கிழமை அன்று நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வுக்கான தொகுதிகள் | கலந்தாய்வு நடைபெறும் இடம் |
11-01-2020 சனி |
காலை 10 மணியளவில் | கொளத்தூர், திரு.வி.க. நகர் தொகுதிகள் | கட்சித் தலைமை அலுவலகம், இராவணன் குடில், எண். 8, செந்தில்நகர், சின்னபோரூர், சென்னை – 600116 |
மாலை 04 மணியளவில் | அம்பத்தூர் தொகுதி | ஜெயா கூட்ட அரங்கம் (Jaya Party Hall), மொனசாமி மடம் தெரு, ராக்கி மருத்துவமனை அருகில் |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்