சுற்றறிக்கை: பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

52

 

க.எண்: 2019120396

நாள்: 31.12.2019

சுற்றறிக்கை: பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு | நாம் தமிழர் கட்சி

கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 04-01-2020 சனிக்கிழமையன்று காலை 10 மணியளவில் சென்னை, வேலப்பன் சாவடி, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கே.வி.என் திருமண மண்டபத்தில் நடைபெறவிருப்பதையொட்டி அதற்கான முன் ஏற்பாடுகள் மற்றும் பணிகளைத் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு நாளை 01-01-2020 புதன்கிழமை காலை 10 மணியளவில், தலைமை அலுவலகத்தில்,  பொதுக்குழுக் கூட்ட ஏற்பாடுகள் குறித்த கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

இக்கலந்தாய்வில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து தொகுதிகள் மற்றும் ஆவடி, அம்பத்தூர், மதுரவாயல், சோழிங்கநல்லூர் மற்றும் திருவொற்றியூர் தொகுதிகளைச் சேர்ந்த மாநில, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்கள் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கு.செந்தில்குமார்

தலைமை நிலையச் செயலாளர்
ksenthil@naamtamilar.org