தமிழர் – சீக்கியர் முதல் ஆண்டு கருத்தரங்கு – சென்னை

141

‘தமிழர் – சீக்கியர் முதல் ஆண்டு கருத்தரங்கு’
23-11-2019
சென்னை

சீக்கிய இனப்போராளியும், மனித உரிமை அமைப்பாளருமான பேராசிரியர் ஜக்மோகன் சிங் அவர்களுடன்
நாம் தமிழர் கட்சியும், தமிழ்த்தேசிய இளைஞர்களும் ஒன்றிணைந்த ‘தமிழர் – சீக்கியர் முதல் ஆண்டு கருத்தரங்கு’ இன்று 23-11-2019 சென்னையில் நடைபெற்றது.

இந்திய ஒன்றிய அரசின் அடக்குமுறைகளால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகும் காஷ்மீரி, சீக்கியர், மணிப்பூரி, நாகாலாந்து மக்கள் உள்ளிட்ட மொழிவழித் தேசிய இனங்கள் குறித்தும், இலங்கையில் வாழும் பூர்வக்குடி மக்களான ஈழத்தமிழர்கள் சிங்கள பேரினவாதத் தாக்குதலுக்கு உள்ளாகும் இன்றைய சூழுல் குறித்தும் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

அதேபோல் இந்திய ஒன்றிய அரசின் பிற மொழி வழித் தேசிய இனங்கள் மீதான இந்தி மொழித் திணிப்பு, புதிய கல்விக்கொள்கை, மத அடிப்படைவாத அரசியல், இயற்கை வள சுரண்டல், நதிநீர் பங்கீட்டுச் சிக்கலில் செய்யும் அரசியல் உள்ளிட்டவை குறித்தும், அவற்றால் தமிழர்கள் மற்றும் சீக்கியர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டன.

தமிழர் – சீக்கியர் தேசிய இனங்களுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திட, நீண்ட கால செயல்திட்ட அடிப்படையில் இரு தரப்புக்கும் இடையே தத்தமது கலாச்சார, பண்பாட்டு விழுமியங்களை பரிமாறிக் கொள்ளும் வகையிலும், இரு தேசிய இனங்களுக்கும் பொதுவான தளங்களில் இணைந்து செயல்பட உதவிடும் வகையிலும் ‘தமிழர் – சீக்கியர் நட்பு மன்றம்’ (Tamil – Sikh Friendship Forum) என்ற ஒன்றை உருவாக்குவதென முடிவு செய்யப்பட்டது.

முந்தைய செய்திசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
அடுத்த செய்திதலைவனுக்குத் தம்பியின் வாழ்த்துகள்! – சீமான்