செய்திக்குறிப்பு: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிமுகப் பொதுக்கூட்டம் – சீமான் பரப்புரை | நாம் தமிழர் கட்சி
அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி – காமராஜர் நகர் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நமது கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
முதலாம் நாளான நேற்று 05-10-2019 சனிக்கிழமை, மாலை 05 மணியளவில், விக்கிரவாண்டி வேட்பாளர் கு.கந்தசாமி அவர்களை அறிமுகப்படுத்தும் அறிமுகப் பொதுக்கூட்டம், விக்கிரவாண்டி. வட்டாச்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.. இதில் சீமான் வேட்பாளர் கந்தசாமியை அறிமுகம் செய்துவைத்து பரப்புரை மேற்கொண்டார்.
https://www.youtube.com/watch?v=vwF50U-yM9A
நாளை 07-10-2019 மாலை 5 மணியளவில் நாங்குநேரி வேட்பாளர் ராஜநாராயணன் அறிமுகப் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கின்றது.
–
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084