பனை விதை நடும் திருவிழா-பண்ருட்டி சட்டமன்ற தொகுதி

30

நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக தமிழகமெங்கும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதைகள் நடும்- “பனை விதை விழா -2019” நிகழ்வுவையொட்டி  பண்ருட்டி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக “ஒரே நாளில் 10 இடங்களில் 3000 விதைகள்” நடும் நிகழ்வு 08.09.2019 சிறப்பாக நடைபெற்றது.

நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டு ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்வுக்கு நெல்லிக்குப்பம் நகர செயலாளர் சிவச்சந்திரன், நகர தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினர். தொகுதி இணைச்செயலாளர் ஐயப்பன், துணைத்தலைவர் சையத் சபீர், தொகுதி இளைஞர் பாசறை இணைச்செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் கடல்தீபன் விதைகளை விதைத்து துவக்கி வைத்தார்.

அவியனூர் ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் அவியனூர் கிளை செயலாளர் வினோத் தலைமை தாங்கினார். கரும்பூர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பண்ருட்டி தொகுதி செயலாளர் பனை விதைகளை விதைத்து துவக்கி வைத்தார்.

லட்சுமிநாராயணபுரம் ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் பண்ருட்டி ஒன்றிய தலைவர் சுரேஷ், பண்ருட்டி இளைஞர் பாசறை செயலாளர் குட்டி (எ)  புருசோத் ஆகியோர் தலைமை தாங்கினார். பண்ருட்டி ஒன்றிய பொருளாளர் வசந்த புருசோத்தமன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி மாநில தொழிலாளர் பாசறை செயலாளர் ரமேஷ் பனை விதைகளை விதைத்து துவக்கி வைத்தார்.

விழமங்கலம் ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் பண்ருட்டி நகர செயலாளர் (கிழக்கு) வேல்முருகன்  தலைமை தாங்கினார். பண்ருட்டி நகர தலைவர்  (மேற்கு) ஆறுமுகசிங்,  பண்ருட்டி நகர பொருளாளர் (கிழக்கு) நிஜாமுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி சட்டமன்ற தொகுதி துணை தலைவர் ஜோசப் அற்புதராஜ் பனை விதைகளை விதைத்து துவக்கி வைத்தார்.

சேமக்கோட்டை ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்  பிரகாஷ்  தலைமை தாங்கி நடத்தினார்.

மாளிகைமேடு ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் அண்ணாகிராமம் நடுவண் ஒன்றிய செயலாளர்  ரவிச்சந்திரன் தலைமை தாங்கி நடத்தினார்.

முத்துகிருஷ்ணாபுரம் வெள்ளப்பாக்கம் வாய்க்கால் கரையில்  நடைபெற்ற நிகழ்வில் முத்துகிருஷ்ணாபுரம் கிளை செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார், தொகுதி செய்தி தொடர்பாளர் பாலசந்தர் முன்னிலை வகித்தார். பண்ருட்டி தொகுதி செயலாளர் பனை விதைகளை விதைத்து துவக்கி வைத்தார்.

ஏரிப்பாளையம் ஏரிக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் ஏரிப்பாளையம் கிளை செயலாளர்  முத்துவேல் மற்றும் வசந்த் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினார்.

திராசு குளக்கரையில் நடைபெற்ற நிகழ்வில் திராசு கிளை செயலாளர்  சந்தோஷ்  தலைமை தாங்கி நடத்தினார்.

3000 விதைகள் இலக்காக இருந்தாலும் 4000 பனை விதைகள் நடப்பட்டது.

முந்தைய செய்திகொடியேற்றும் நிகழ்வு-செய்யூர் தொகுதி
அடுத்த செய்திபெரும்பாட்டன் மாவீரர் சுந்தரலிங்கனார் வீரவணக்கம் நிகழ்வு