நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் சீமான் தீவிர பரப்புரை

726

செய்திக்குறிப்பு: நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமியை ஆதரித்து குடியாத்தம், பேர்ணாம்பட்டு பகுதிகளில் சீமான் தீவிர பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – ஐந்தாம் நாள் 02-08-2019 | நாம், தமிழர் கட்சி

வரும் ஆகத்து-05 அன்று நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் தீபலட்சுமி அவர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

நேற்று நான்காம் நாளான 01-07-2019 வியாழக்கிழமை மாலை 04 மணியளவில் குடியாத்தம் பேருந்து நிலையம் அருகிலும்  இரவு 08 மணியளவில் பேரணாம்பட்டு பேருந்து நிலையம் அருகிலும்நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையாற்றினார்.

குடியாத்தம்:

பேரணாம்பட்டு

ஐந்தாம் நாளான இன்று 02-08-2019 வெள்ளிக்கிழமை, மாலை 04 மணியளவில் வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட அம்பலூர் பகுதியிலும்

இரவு 08 மணியளவில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட வேலூர் ஓட்டேரி பகுதியிலும்

நடைபெறவிருக்கும் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை நிகழ்த்துகிறார்.

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!
நமது சின்னம் 
விவசாயி


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு: ஐந்தாம் நாள் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்கள் | வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019
அடுத்த செய்திஅறிவிப்பு: ஆகத்து-24, வீரதமிழச்சி செங்கொடி 8ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சுங்குவார் சத்திரம்(காஞ்சிபுரம்) | மகளிர் பாசறை