புகழ்பெற்ற நாடக எழுத்தாளர் அம்மையார் ராஜலட்சுமி மரணம் – சீமான் இரங்கல்

127

புகழ்பெற்ற நாடக எழுத்தாளர் அம்மையார் ராஜலட்சுமி மரணம் – சீமான் இரங்கல் | நாம் தமிழர் கட்சி

நாடறியப்பட்ட கல்வியாளரும், புகழ்பெற்ற நாடக எழுத்தாளரும், நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாருமான இராஜலட்சுமி அம்மையார் அவர்கள் மறைவுற்ற செய்திகேட்டு மிகுந்த துயருற்றேன். 1958லிலேயே கல்விப்பணியைத் தொடங்கிய அம்மையார் அவர்கள், இலக்கியம் மற்றும் கல்விக்காக மத்திய அரசின் ‘பத்மஸ்ரீ’ விருது பெற்றவராவார். பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளி குழும தலைவராக இருந்து மிகச்சிறந்த பள்ளியாக அதை வளர்த்தெடுத்தவர். ‘அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன்’ எனும் நாடகக்குழுவின் மூலம் நாடகக் கலைஞர்களை ஊக்குவித்து, நாடகக்கலையையும் வளர்த்தெடுத்தவராவார். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது குடும்பத் துயரத்தில் பங்கேற்கிறேன்.

=

செந்தமிழன் சீமான்,

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி