பஹ்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக கர்மவீரர் காமராஜரின் 117 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு (26/07/2019)கிங் ஹமத் மருத்துவமனையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கொடையாளர்கள் குருதிக்கொடை அளித்து கர்மவீரர் காமராஜரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர்
மருத்துவமனையின் இரத்த வங்கியின் மேலாளர் கூறுகையில் ஒரே சமயத்தில் இத்தனை கொடையாளர்கள் வந்து எங்களிடம் குருதி கொடை அளித்தது பல்வேறு தரப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் உயிரை மீட்பதற்கு நீங்கள் கொடுத்த சிறந்த ஒரு தானம் என்று அவர் கூறியுள்ளார்.