கோவில்பட்டி நாம்தமிழர்கட்சியினர் நகரின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் மற்றும்வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி பிரிவு) ஆகியோரிடம் மனு அளித்தனர்
அந்த மனுவில் கோவில்பட்டி நகருக்குட்பட்ட தங்கப்பநாடார் நந்தவனம் தெரு வில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு கடந்த ஆறுமாதகாலமாக சரியான முறையில் குடிநீர் விநியோகிக்கப்படுவதில்லை, இதனால் அதிகவிலை கொடுத்து தனியாரிடம் குடிநீர் வாங்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே மேற்கண்ட பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்கேண்டுமென அந்தமனுவில் தெருவிக்கப்பட்டுள்ளது.
நாம்தமிழர்கட்சியினரின் கோரிக்கையை உடனே பரிசீலிப்பதாகவும், கூடிய விரைவில் குடிநீர் முறையாக வழஙக்கப்படும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதியளித்தனர்