அறிவிப்பு: சீமான் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஐந்தாம் நாள் (08-05-2019 அரவக்குறிச்சி)

41

அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – ஐந்தாம் நாள் (08-05-2019 அரவக்குறிச்சி) | நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் மே-19 அன்று நடைபெறவிருக்கும் சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், கடந்த 04-05-2019 முதல் 17-05-2019 வரை தொடர் பரப்புரையில் ஈடுபடவிருக்கிறார்.

நாளை ஐந்தாம் நாள் 08-05-2019 புதன்கிழமை மாலை 05 மணியளவில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் ப.கா.செல்வம் அவர்களை ஆதரித்து அரவக்குறிச்சி, ஈசநத்தம் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் அரவக்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்திலும் பரப்புரை மேற்கொள்கிறார்.

இரவுப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வலையொளி (YouTube channel) பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படும்.

இணைப்பு:

https://www.youtube.com/c/NaamThamizharKatchi/live

புதியதொரு தேசம் செய்வோம்!
மக்கள் புரட்சியால் அதை உறுதி செய்வோம்!

உழவை மீட்போம்! உலகைக் காப்போம்!

நமது சின்னம் “விவசாயி”

வலைதளம்: http://www.naamtamilar.org/


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஒட்டப்பிடாரம் இடைத்தேர்தல் வேட்பாளரை ஆதரித்து சீமான் பரப்புரை | இன்றையப் பரப்புரைப் பயணத்திட்ட விவரம் – நான்காம் நாள் (07-05-2019 திருப்பரங்குன்றம்)
அடுத்த செய்திதிருப்பரங்குன்றம் வேட்பாளரை ஆதரித்து சீமான்  பரப்புரை | இன்றையப் பயணத்திட்ட விவரம் – ஐந்தாம் நாள் (08-05-2019 அரவக்குறிச்சி)