ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை

121

செய்திக் குறிப்பு: ஆரணி, திருவண்ணாமலை நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை | நாம் தமிழர் கட்சி

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. “விவசாயி” சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், 25-03-2019 முதல் 16-04-2019 வரை தமிழகம் மற்றும் புதுவை முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொடர் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

ஆறாம் நாளான நேற்று 30-03-2019 சனிக்கிழமை மாலை 05 மணியளவில், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பிரகலதா அவர்களை ஆதரித்து திண்டிவனம் (காந்தி சிலை எதிரில்) பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://youtu.be/yr6g03xTScI

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் சர்புதின் அவர்களை ஆதரித்து கள்ளக்குறிச்சி (நகராட்சி திடல், மந்தைவெளி மேடை), தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

காணொளி: https://www.youtube.com/watch?v=kWUXi53mKJ4

முந்தைய செய்திநாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பயணத்திட்டம் – பத்தாம் நாள் (03-04-2019)
அடுத்த செய்திபொள்ளாச்சி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தேர்தல் பரப்புரை