வானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

852

வானூர்திப்-போக்குவரவு | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு

நாட்டின் சுற்றுலா, தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு வானூர்திப் போக்குவரவு மிகவும் முக்கியமானது. தமிழகத்தில் வானூர்திப் போக்குவரவை விரிவாக்கம் செய்யத் தேவையான வேண்டிய திட்டங்களை முன்வைக்கப்படுகிறது.

சுற்றுலா வளர்ச்சி..

சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பெருக்கும் விதமாக மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதோடு தமிழகத்தின் முக்கிய நகரங்கள், சுற்றுலாத் தலங்கள் ஆகிய பகுதிகளுக்கும் உள்நாட்டு விமானப் போக்குவரவைத் தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலிறுத்திச் செய்து முடிக்கப்படும்.

வான்வெளி ஆராய்ச்சி

தமிழர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வானவியலில் மிக்கத் தேர்ச்சி பெற்றிருந்தனர். இன்று தமிழ்நாட்டில் வானவியல் அறிவியலில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அதிகமாக உள்ளனர். இதில் பலர் வேலைவாய்ப்பின்றி உள்ளனர். இவர்களின் ஆற்றலைப் பயன்படுத்த மத்திய அரசின் துணையுடன் வான்வெளிப் பயிற்சி மையம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

  • கோவில்பட்டி, நெய்வேலி, வேலூர், செட்டிநாடு, கயத்தாறு, உளுந்தூர்பேட்டை, சோழவரம் ஆகிய இடங்களில் உள்ள உபயோகத்தில் இல்லாத வானூர்தி ஓடுதளங்களைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வரவும், வானூர்தி இயக்கப் பயிற்சி, மாணவர்கள் பயிற்சி, தேர்ச்சி ஆய்வுக் கூடம் உட்பட அனைத்து வசதிகளும் உருவாக்க வேண்டுமென கோரப்படும். இவை தனியார் வானூர்தி நிறுவனங்களின் பயன்பாட்டிற்கும் அளிக்கப்படும்.
முந்தைய செய்திஅடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றம் | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு
அடுத்த செய்திதுறைமுகக் கொள்கை | நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு | மக்களரசு