நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி(தனி) தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் படுக தேச பார்ட்டி வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு! – சீமான் அறிக்கை

266

அறிக்கை: நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி(தனி) தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் படுக தேச பார்ட்டி வேட்பாளருக்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு! – சீமான் அறிக்கை | நாம் தமிழர் கட்சி
க.எண்: 2019030067
நாள்: 31.03.2019

நடைபெறவிருக்கின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி போட்டியிட முடியாத சூழலில், நாம் தமிழர் கட்சி தனது உளமார்ந்த முழு ஆதரவை அத்தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடும் படுக தேச பார்ட்டி வேட்பாளருக்கு வழங்கி இருக்கிறது. அக்கட்சியின் சார்பாக நீலகிரி தொகுதியில் ஊன்றுகோல் (கைத்தடி) சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் திரு மா.சுப்பிரமணி அவர்களின் வெற்றிக்காக நாம் தமிழர் கட்சியினர் முழு வீச்சில் பாடுபட வேண்டும் எனவும், கட்சியின் அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் படுகதேச பார்ட்டிக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி படுகதேச பார்ட்டியின் சுயேட்சை வேட்பாளர் மா.சுப்பிரமணி அவர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க உழைக்க வேண்டும் எனவும் இதன்மூலம் கேட்டுக்கொள்கிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்