முப்பெரும் விழா, ஓசூர் -கிருட்டிணகிரி (மே) மாவட்டம் – தமிழ்ப்புத்தாண்டு, தைப்பூசம் மற்றும் பொங்கல் விழா
**************************************
கிருட்டிணகிரி (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கடந்த 27.01.2019 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை ஓசூர் முனீசுவரன் நகர் பெரியார் திடலில் இரண்டாம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் மற்றும் தைப்பூசம் ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
காலை 8:00 மணிக்கு முருகன் வேல் வழிப்பாட்டுடன் தொடங்கிய விழாவில் நாம் தமிழர் உறவுகள் மற்றும் பொதுமக்கள் புது பானையில் பொங்கல் வைத்து உழவர் திருநாளை கொண்டாடினர்.
பின்னர் சிறுவர்/சிறுமியர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, ஓட்டப்போட்டி, இசை நாற்காலி, குவளையில் வண்ணநீர் நிரப்புதல், பெண்களுக்கான கோலப்போட்டி, எலுமிச்சை கரண்டி ஓட்டம், ஆண்களுக்கான பானை உடைத்தல் போட்டி, கயிறு இழுத்தல் போட்டி ஆகிய பல போட்டிகள் நடத்தப்பட்டன.
மாலை 4:00 மணியளவில் கரகாட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கிருட்டிணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு.தமிழ்மாறன் (எ) ரீகன், ஓசூர் தொகுதி செயலாளர் திரு.தமிழ்ச்செல்வன், ஓசூர் தொகுதி தலைவர் திரு.இரவிசங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக
மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அன்புத்தென்னரசன் மற்றும் ஆட்சி மொழி பாசறை ஐயா.மறத்தமிழ் வேந்தன்
ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை நல்கினர்.
ஓசூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அனைவரும் முன்னின்று விழாவினை திறம்பட திட்டமிட்டு சிறப்பாக நடத்தினர்.