அமீரகத்தில் பணத்தை காவல் துறையில் ஒப்படைத்த தமிழன்.சீமான் வாழ்த்து

86

நேர்மையின் சிகரம் தம்பி அஷ்ரப் அலி அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்….

குடும்பத்தின் பொருளாதாரத்தை தேடி வளைகுடா நாடுகளில் ஒன்றான அமீரகத்தின் சார்ஜா நகரில் பணி செய்து வந்த வேளையில் 01-12-2018 அன்று சனிக்கிழமை அதிகாலை ஒரு பள்ளியில் தனது தொழுகையை முடித்து வெளியே வந்த போது அந்த பள்ளி வாசல் முன்பு இந்திய மதிப்பில் ரூ-8,50,000/- மதிப்புள்ள (44,495 திராகம்)பணத்துடன் ஒரு பை கீழே கிடந்ததை கண்டெடுத்தார். அந்த பணப்பையை உடனே எந்தவித தீய சிந்தனைக்கும் இடம் கொடாமல் அல்பர்சா, துபாய் காவல்நிலையத்திற்கு சென்று ஒப்படைத்துவிட்டார். அந்த நேரத்தில் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் கஜா கொடுங்காற்றினால் குடும்ப உறவுகள் மற்றும் வீட்டில் உள்ள உறவுகள் பாதிப்படைந்த வேலையிலும், அவருடைய தேவை மிக அதிகமாக இருந்த நிலையிலும் காவல்துறையை தொடர்பு கொண்டு தான் கீழே கண்டெடுத்த பொருளை ஒப்படைத்து தமிழனின் மனித நேயத்தையும் நேர்மையையும் நிலைநாட்டியுள்ளார், அன்றைய நிலையில் கொடுங்காற்று தனது தாயாரின் கை உடைந்த நிலையில் மருத்துவ செலவிற்காக பணம் தேவை உடனே அனுப்பு என்ற நிலையிலும் தனது நேர்மையை நிலைநாட்டிய அந்த தம்பிக்கு எத்துணை வாழ்த்துக்கள் கூறினாலும் அதற்கு ஈடுஇணை ஆகாது.

அதே சமயம் சகோதரர் அசரபுதீன் அவர்களின் நேர்மையை பாராட்டி “நேர்மைக்கான சான்றிதழ்” துபாய் காவல் நிலைய ஆணையர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள். – என்னும் வள்ளுவப்பெருந்தகையின் கூற்றுப்படி வாழ்ந்து புலம்பெயர் தேசத்திலும் தமிழர் அறத்தைப் பறைசாற்றியுள்ள தம்பி அஷ்ரப் அலி அவர்களுக்குப் புரட்சி வாழ்த்துகளை தெரிவித்தார்

அது சமயம் அமீரக செந்தமிழர் பாசறை சார்பாக நன்றியும், புரட்சி வாழ்த்துகளையும் தெரிவித்தார்கள்

 

முந்தைய செய்திநிலவேம்பு  சாறு வழங்குதல்-உறுப்பினர் சேர்க்கை முகாம்-அண்ணா நகர் தொகுதி
அடுத்த செய்திதலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள்-ரத்த தான முகாம்