மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்-நாம் தமிழர் கட்சி-நாகை மாவட்டம்

23

நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் தொடுவாய் ஊராட்சியை சேர்ந்த மீனவரும் நாம் தமிழர் கட்சி உறுப்பினருமான கவியரசன் என்பவர், கடந்த 10-10-2018 அன்று கடலில் மீன்பிடிக்கச் சென்றிருந்தபோது படகிலிருந்து தவறி விழுந்து காணாமல் போனார். உடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சித்தும் பலன் கிடைக்கவில்லை. அரசு தரப்பில் விரைவு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டப்படுகிறது. இந்நிலையில் நேற்று 19-10-2018 தொடுவாய் கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர்.