அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி தொகுதி

111

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி தொகுதிசார்பாக |தமிழ்தேசியப்பெரும்பாட்டன் மாவீரன் அழகுமுத்துகோன் புகழ்வணக்கப்பொதுக்கூட்டம் | கோவில்பட்டி கிருட்டிணன் கோயில்திடலில் புதன்கிழமை 05/09/2018 அன்று மாலை 5மணியளவில் நடைபெற்றது…

முதல்நிகழ்வாக மாவீரன் அழகுமுத்துக்கோன் மற்றும் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவபடத்திற்கு மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தப்பட்டது..

முத்துவேல்ராசா வரவேற்புரையாற்றினார்

மாநில கொள்கைபரப்புச்செயலாளர் புதுகை கு.வெற்றிசீலன் மற்றும் மாநில இளைஞர்பாசறைச்செயலாளர் இசை.சி.ச.மதிவாணன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர்

தொகுதி இளைஞர்பாசறைச்செயலாளர் அருண்குமார் நன்றியுறை ஆற்றினார்

இந்நிகழ்விற்கு கோவில்பட்டி தொகுதி தொழிற்சங்க பாசறைச்செயலாளர் ஓட்டுனர் கோ.சங்கர் தலைமை வகித்தார்..

கோவில்பட்டி ஒன்றிய இளைஞர்பாசறைச்செயலாளர் சிவசுடலை , தொகுதி இளைஞர்பாசறை இணைச் செயலாளர் சந்தோசு மற்றும் நகர இளைஞர்பாசறை பொறுப்பாளர் நாகேந்திரதேசாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

இதில் தூத்துக்குடி மத்தியமாவட்டச்செயலாளர் ரமேஷ்பாபு மற்றும் விளாத்திகுளம் தொகுதிச்செயலாளர் செல்லப்பா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்

இந்நிகழ்விற்கான ஏற்பாட்டினை தொகுதிச்செயலாளர் இராசேசு கண்ணா , தொகுதி பொருளாளர் தியாகராசன், தொகுதி கலைஇலக்கியபண்பாட்டுபாசறைச்செயலாளர் பாலசுப்பிரமணியன் , மற்றும் கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன் , மணியாச்சி கிளைச்செயலாளர் மகேஷ்குமார் கயத்தார் நகரச்செயலாளர் கருப்பசாமி, கழுகுமலை நகரச்செயலாளர் முத்துராமலிங்கம், ஆகியோர் செய்திருந்தனர்.

முந்தைய செய்திமரக்கன்று நடும் பணி-துண்டறிக்கை பிரச்சாரம்-ராணிப்பேட்டை தொகுதி
அடுத்த செய்திகும்மிடிப்பூண்டி சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு