தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த 18 பேர் கைது

81

கட்சி செய்திகள்: தனியார் நிகழ்ச்சிக்காக அரசு பள்ளிக்கு முழுவிடுமுறை: எதிர்ப்பு தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மணலி பேரூராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தனியார் அமைப்பின் நிகழ்ச்சியை நடத்திக்கொள்ள அனுமதி வழங்குவதற்காக இன்று 06-07-2018 வெள்ளிக்கிழமை பள்ளிக்கு முழுவிடுமுறை அளிக்கப்பட்டது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொள்ளாது பள்ளிக்கு முழுவிடுமுறை அளித்து விட்டு தனியார் அமைப்பின் நிகழ்ச்சியை நடத்திய பள்ளி நிர்வாகத்திடமும் நிகழ்ச்சிக்கு அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினரிடமும் கேள்வியெழுப்பிய திருவொற்றியூர் தொகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் 18 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரின் மீதும் மணலி காவல்நிலையத்தில் பொய்யாக புனையப்பட்ட குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திருவொற்றியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு நேர் நிறுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். நாம் தமிழர் கட்சியினர் மீது தொடர்ச்சியாக பொய் வழக்குகள் புனையப்படுவதும் சிறைப்படுத்தப்படுவதும் தொடர்கின்றன.

கைது செய்யப்பட்டவர்கள் விவரம்:
1. இரா.மதன்குமார் (திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலாளர்)
2. ம.சதிசுகுமார் (மணலி 21வது வட்டச் செயலாளர்)
3. செ.சதிசுகுமார் (மணலி 21வது வட்டத் தலைவர்)
4. அ.அன்புக்கண்ணன் (மணலி நகரச் செயலாளர்)
5. கா.கௌரி (மாத்தூர் மகளிர் பாசறை செயலாளர்)
6. வே.பாஸ்கரன் (மணலி 18வது வட்டச் செயலாளர்)
7. சு.ஆனந்தன் (திருவொற்றியூர் தொகுதி துணைத் தலைவர்)
8. மு.சத்திய அரிகரன் (மாணவர் மற்றும் இளைஞர் கூட்டமைப்பு, திருவள்ளூர் மா ஒருங்கிணைப்பாளர்)
9. ம.மணிகண்டன் (மணலி)
10.பொ.முத்துக்குமார்
11. பா.அருண்குமார்
12. மு.மாடசாமி
13. வே.சரவணன்
14. பா.இராமச்சந்திரன்
15. வ.திலிப்
16. சு.விஜயகுமார்
17. இரா.குமரன்

தமிழக அரசின் சர்வதிகார அடக்குமுறையை சட்டத்தின் வாயிலாக எதிர்கொண்டு அனைவரையும் சிறைமீட்க நாம் தமிழர் வழக்கறிஞர் பாசறை விரைந்து செயல்பட்டுவருகிறது.

சிறைசென்ற உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்!


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி‘ஆம் ஆத்மி’ வசீகரன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்க! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திதூத்துக்குடி அரசப் பயங்கரவாதம்: பலிகடாவாக்கப்படும் நாம் தமிழர் கட்சியினர் | வழக்கறிஞர் பாசறை செய்தியாளர் சந்திப்பு