ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடிச் சிறைசென்ற ஐயா வியனரசு விடுதலை

77

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்ற தொடர் போராட்டத்தின் 100வது நாள் அன்று நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பேரணியில் பங்கேற்றதைச் சான்றாக வைத்து, பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் தொடர்புள்ளதாகக் கூறி 7 பிரிவுகளின் கீழ் பொய் வழக்குகள் பதிந்து கடந்த மே மாதம் 30ஆம் தேதி கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா நெல்லை அ.வியனரசு அவர்கள், இன்று 24-07-2018 பிற்பகல் 12 மணியளவில் பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்துள்ளார். #Sterlite #Thoothukudi