சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியினர் மீதான வழக்கு விவரங்கள் சேகரித்தல் தொடர்பாக

77

சுற்றறிக்கை: நாம் தமிழர் கட்சியினர் மீதான வழக்கு விவரங்கள் சேகரித்தல் தொடர்பாக

தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினைகளுக்காக முதலில் ஒலிக்கும் குரலாகவும், மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக உயரும் முதல் கரமாகவும், போராட்டக் களத்தில் மக்களோடு துணைநிற்கும் முதல் ஆளாகவும் நாம் தமிழர் கட்சியினர் இருப்பதால் நம் மீது மத்திய, மாநில அரசுகளின் அறிவிக்கப்படாத அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. எந்தப் பகுதியில் கட்சி நிகழ்வை முன்னெடுத்தாலும் அதற்கு அனுமதி மறுப்பதும், கடைசிநாள் வரை அலைகழிப்பதும், முதலில் அனுமதி கொடுப்பதும் நிகழ்விற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்த பின்னர் இறுதி நேரத்தில் அனுமதி மறுப்பதும், கட்சிப் பதாகைகள், சுவரொட்டிகளைக் கிழிப்பதும், சிறு காரணங்களுக்குக்கூட பெரிய வழக்குகள் பதிவதும் அதற்காக சிறைப்படுத்துவதுதல், குடும்பத்தினரை மிரட்டுதல் போன்ற பல நெருக்கடிகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நமது கட்சி மீது தொடுக்கப்படும் மறைமுகப் போரை சட்டத்தின் மூலமாக திறம்பட எதிர்கொள்ள நமது கட்சியின் வழக்கறிஞர் பாசறை முழுமூச்சாய் ஈடுபட்டுள்ளது. வழக்கறிஞர் பாசறைக்குத் தேவையான தகவல்களை உரிய முறையில் வழங்கும்போது அவர்கள் பணி மிகவும் எளிதாகும். எனவே இதுவரை தங்கள் பகுதிகளில் நாம் தமிழர் கட்சி மீதும் நம் உறவுகள் மீதும் பதியப்பட்டுள்ள வழக்குகளின் முழு விவரத்தையும் விரைந்து தலைமை அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ (raavanankudil@gmail.com) அனுப்பிவைக்கும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.
அனுப்பவேண்டிய தகவல்கள்:
1. முதல் தகவல் அறிக்கை – நகல் (FIR copy)
2. முழு செய்தி (நாள், நேரம், பங்குபெற்றவர்கள் விவரம்)
3. ஆதாரங்கள், புகைப்படங்கள், காணொளி (DVD)

அஞ்சல் முகவரி: இராவணன் குடில், நாம் தமிழர் கட்சி – தலைமையகம், எண் 8, மருத்துவமனைச் சாலை, செந்தில் நகர், சின்னப்போரூர், சென்னை 600116

மின்னஞ்சல் முகவரி: raavanankudil@gmail.com

தொலைபேசி: 044-43804084


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி