‘உலா’ வாடகை மகிழுந்து சேவையை சீமான் தொடங்கிவைத்தார்

39

கட்சி செய்திகள்: ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையை சீமான் தொடங்கிவைத்தார் | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி மற்றும் இலட்சுமி மக்கள் சேவை வழங்கும் ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் அதிகாரப்பூர்வமான ஓட்டுநர் சேர்க்கையை நேற்று 24-06-2018 நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், தொடங்கிவைத்தார். முதல்நாளிலேயே 1000க்கும் மேற்பட்ட ஒட்டுநர்கள் இணைந்துள்ளனர்.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

சமீபகாலமாக மகிழுந்து ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கார்ப்பரேட் நிறுவனங்களின் தரகு முறையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்திற்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘உலா’ வாடகை மகிழுந்து சேவைக்கான செயலியை எந்தவித தரகுமுறை (Brokerage), சேவை இலக்கு (Daily Target) போன்றவை தவிர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகமெங்கும் உள்ள வாடகை மகிழுந்து, தானி ஓட்டுநர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கு வெளிப்படையான நேரடி கட்டண நிர்ணயம் செய்யப்படுவதால் மிகக்குறைந்த சேவை கட்டணத்தில் பயணம் செய்யலாம். நெருக்கடி நேரக் கட்டணம் (PEAK TIME CHARGE), இரத்து செய்தலுக்கான கட்டணம் (CANCELATION FEE) மற்றும் இதர மறைமுகக் கட்டணங்கள் இல்லை. நேரடியாக மக்கள் பயணக் கட்டணத்தை ஓட்டுநரிடமே செலுத்தலாம். ‘உலா” செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.

‘உலா’ வாடகை மகிழுந்து சேவை – பகிரி எண் (Whatsapp Number) – +91 90805 63750

‘உலா’ வாடகை மகிழுந்து சேவையில் தங்களது வாகனத்தை இணைக்க, வலைதளத்தில் அல்லது பகிரியில் (Whatsapp) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் 1.பெயர் (Name), 2.அலைபேசி எண் (Mobile Number), 3.புகைப்படம் (PASSPORT SIZE PHOTO), 4. வாகன ஒட்டி உரிமம் (Driver License), 5.வாகனப் பதிவு சான்றிதழ் (RC Book), 6. வாகனக் காப்பீடு (Insurance), 7. காவலர் சான்றிதழ் (Police Certificate).

மக்களுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே நல்லுணர்வை உருவாக்குவதே ‘உலா’ வாடகை மகிழுந்து சேவையின் குறிக்கோள். இதுவரை ஓட்டுநர்கள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளும் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. மேலும் வியப்பூட்டும் மேம்பாடுகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் விவரங்களுக்கு www.ulacabs.org +91 90805 63750


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி