சென்னை சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் ஆதரவு

115

கட்சி செய்திகள்: சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் தொடர் போராட்டம் – சீமான் நேரில் சந்திப்பு | நாம் தமிழர் கட்சி

சென்னை பாரிமுனையில் உள்ள நுற்றாண்டுகள் பழமை வாய்ந்த அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சுமார் 2500 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கிருக்கும் கல்லூரி திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் பட்டறைபெரும்பாக்கம் ஆகிய இடங்களுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. அந்த பணிகள் முடிந்து தற்போது இந்த ஆண்டு முதல் சட்டக்கல்லூரியை தொடங்கவிருக்கின்றனர். சட்டக்கல்லூரி மாற்றப்படுவதைக் கண்டித்து சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் பலமுறை ஆர்ப்பாட்டம், மறியல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கல்லூரியை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 4 நாட்களாக சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று 02-03-2018 (வெள்ளிக்கிழமை) காலை 11:30 மணிக்கு சட்டக்கல்லூரிக்கு நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களைச் சந்தித்து பேசினார். பின்னர் மாணவர்களின் போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற நாம் தமிழர் கட்சி இறுதிவரை உறுதியாக துணைநிற்கும் என்று ஆதரவளித்தார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திவெளி மாநிலத்தில் உயிரிழந்த மாணவர்களின் தொடர் மரணம் குறித்து மத்தியப் புலனாய்வு விசாரணை நடத்தப்பட வேண்டும் – – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திபாப்புலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு ஜார்க்கண்ட் அரசு தடை: எஸ்.டி.பி.ஐ கட்சி ஒருங்கிணைத்த ஆலோசனைக் கூட்டத்தில் சீமான் பங்கேற்பு