காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஆர்ப்பாட்டம் – புதுப்பட்டினம்

63

29-03-2018 காஞ்சிபுரம் மாவட்டத்தில் புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக
1, தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும்
2, கல்பாக்கத்தில் இயங்கும் காலாவதியான சென்னை அணு மின் நிலையத்தை மூடக்கோரியும்
3, காவிரி மேலான்மை வாரியம் அமைக்காமல் இருக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன முழக்கங்களை திரு: சூசைராஜ் ( காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர்) அவர்கள் முழங்க.
தொடக்க உரையாக திரு: சாந்தரூபன் (மாணவர் பாசறைச் செயலாளர்) அவர்களும், கல்பாக்கம் அணு உலையினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனால் உண்டாகிய நோய்களை பற்றி தெளிவாக மக்களுக்கு எடுத்து சொன்ன மக்களின் மருத்துவர் ஐயா திரு: புகழேந்தி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துரையாடினார். மேலும் திரு: அன்புத்தென்னரசு (மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்கள் கண்டனப் பேருரையாற்றினார். இறுதியாக ஆர்ப்பாட்டத்தின் நிறைவுரையாக திரு: தேசிங்கு ( தொகுதிச் செயலாளர்) அவர்கள் முடித்து வைத்தார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் நன்றி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு பாதுகாப்பை சிறப்பாக நடத்தி கொடுத்த கல்பாக்கம் காவல் துறை அதிகாரிகளுக்கும் நன்றி…

செய்திக்குறிப்பு:
இரா. இராஜேஷ்.
செய்யூர் தொகுதி செய்தி தொடர்பாளர்.

முந்தைய செய்திமுசிறி தொகுதி தா. பேட்டை ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஅறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக விவசாயிகள் நடத்தும் மாபெரும் பேரணியில் நாம் தமிழர் கட்சி பங்கேற்பு