மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர் | சீமான் வீரவணக்கவுரை

131

27-01-2018 மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – அரியலூர் | சீமான் வீரவணக்கவுரை | நாம் தமிழர் கட்சி

நம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களின் நினைவைப் போற்றும் விதமாக 27-01-2018 (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு அரியலூரில் நாம் தமிழர் கட்சி நடத்திய மாபெரும் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

முன்னதாக மொழிப்போர் ஈகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மொழிப்போர் ஈகி கீழப்பழுவூர் சின்னசாமி அவர்களின் உருவப் படத்திற்கு சுடரேற்றி மலர்வணக்கம் மற்றும் வீரவணக்கம் செய்யப்பட்டது. மேலும் கீழப்பழுவூர் சின்னசாமி அவர்களின் மனைவி கமலா அம்மையாருக்கு நாம் தமிழர் உறவுகள் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிதியுதவி வழங்கினார்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி