போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் – தமிழக அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

16

போக்குவரத்துத் தொழிற்சங்கங்களுடன் ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது அரசுத் தரப்பில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்துப் போக்குவரத்து துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கும் தொழிலாளர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்கமும் துணைநிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு, போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி