24-12-2017 போற்றுதற்குரிய நம் வழிகாட்டி ஐயா பெரியார் 44ஆம் ஆண்டு நினைவுநாள்: புகழ் வணக்கம்

748

24-12-2017 போற்றுதற்குரிய நம் வழிகாட்டி ஐயா பெரியார் 44ஆம் ஆண்டு நினைவுநாள்: புகழ் வணக்கம்

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு
தன்மானம் பார்த்தால் இனமானம் இல்லை
இனமானம் பார்த்தால் தன்மானம் இல்லை
இந்த உலகம் உன்னைப் போற்றிக் கொண்டாட வேண்டுமா?
நீ மற்றவர்களுக்காக உழைக்கத் தொடங்கு! உங்களை மற்றவர்கள் எப்படி மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ அதைப் போலவே நீங்களும் மற்றவர்களை மதிக்க வேண்டும். அதுதான் நாகரீகம்.
நான் பெண்களுக்குச் சம உரிமை கேட்பதை அவரவர் மனைவிமாரை மனதில் வைத்துக்கொண்டு எதிர்க்கிறீர்கள். உங்களைப் பெற்ற தாயையும் உங்கள் உடன்பிறந்த உங்கள் சகோதரிகளையும் மனதில் வைத்துக்கொண்டு சிந்தித்தால் நான் கேட்பது சரியென்று படும்.
பெண்ணிய உரிமைக்காகப் போராடிய பெருந்தகை சாதி ஒழிப்பு சமூக நீதி தீண்டாமை ஒழிப்பு மூட நம்பிக்கை ஒழிப்பு இந்தக் களங்களில் சற்றும் சமரசமின்றிப் போராடிய கலகக்காரர் ஐயா பெரியார் அவர்களின் நினைவு நாள் இன்று. மதிப்புமிகு அந்தப் பெருந்தகைக்கு போற்றுதற்குரிய நம் வழிகாட்டிக்கு நம் புகழ் வணக்கத்தைச் செலுத்துவோம்.
நாம் தமிழர்!


சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஷரிஅத் பாதுகாப்புப் பேரவையின் மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் – சீமான் கண்டனவுரை
அடுத்த செய்திஅறிவிப்பு: வீரப்பெரும்பாட்டியார் வேலுநாச்சியாரின் 221ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு | தலைமையகம்