கொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் | கீழ்பென்னாத்தூர் தொகுதி

26

கொடியேற்றம், மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்:

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் இசுக்கழிகாட்டேரி கிராமத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி, மரக்கன்று வழங்கல் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடத்தி நிலவேம்பு சாறு வழங்கப்பட்டது.

இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் கொடியேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு இளைஞர் பாசறை ஒன்றியச் செயலாளர் அருள் தலைமை வகித்தார், தமிழ் (எ) பிரபு, பாரிவள்ளல் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.