கிருட்டிணகிரியில் தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் & நிலவேம்பு சாறு வழங்கல்

96

கிருட்டிணகிரி தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டுவருகிறது. 01-10-2017 அன்று கிருட்டிணகிரி தொகுதிக்குட்பட்ட சந்தியா கல்லூரி பேருந்து நிறுத்தம் ராயக்கோட்டை சாலையில் 46வது முகாம் நடைபெற்றது. இதில் கிருட்டிணகிரி நகரத்தை சார்ந்த 25க்கும் மேற்பட்ட நபர்கள் தங்களை கட்சியில் இனைத்துக்கொண்டனர்.

02-10-2017 அன்று கிருட்டிணகிரி புதிய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் 47வது முகாம் மற்றும் ‘டெங்கு’ காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிலவேம்பு மூலிகைச்சாறு 1000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.