அனிதா உயிரைப் பறித்த நீட் தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி கிருட்டிணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம்

57

03-09-2017 ஞாயிற்றுகிழமை காலை 10 மணிக்கு, கிருட்டிணகிரி பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகே சகோதிரி அனிதாவின் மருத்துவ கனவையும்,உயிரையும் பறித்த நீட் தேர்வை அமுல்படுத்திய மதிய மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் இருவரும் தலைமை தாங்கினார்கள், ஓசூர் தொகுதி செயலாளர் தமிழ்ச்செல்வன் அவர்கள் நிகழ்ச்சி நிரலை வாசித்தார், கிழக்கு மாவட்ட இணை செயலாளர் பொறியாளர் ரமேசு வரவேற்ப்புரை நிகழ்த்தினார், கிழக்கு மாவட்ட துணை செயலாளர் கா.அ.சிவராமன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார், தருமபுரி மண்டல செயலாளர் தகடூர் இளமாறன் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்கள், சரவணன் கிழக்கு மாவட்ட பொருளாளர், சுரேசுகுமார் கிருட்டிணகிரி தொகுதி செயலாளர், வேலாயுதம் கிருட்டிணகிரி தொகுதி தலைவர், சிவசம்பு கிருட்டிணகிரி தொகுதி துணை தலைவர், பிரசாந்த் கிழக்கு மாவட்ட மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர், சங்கீதா & மேனகா கிழக்கு மாவட்ட மகளிர் பாசறை ஒருங்கிணைபாளர்கள், ஐய்யப்பன் புதிய மாற்றம் குழு ஒருங்கிணைப்பாளர், கவின்குமார் கிழக்கு மாவட்ட லஞ்சம் ஊழல் ஒழிப்பு பாசறை ஒருங்கிணைப்பாளர், விசுவநாதன் கிழக்கு மாவட்ட வீர தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் ஈழமுரசு ஊத்தங்கரை தொகுதி தலைவர், காசிலிங்கம் ஊத்தங்கரை தொகுதி செயலாளர், இளந்தமிழன் வேப்பனப்பள்ளி தொகுதி செயலாளர், ஜகன் தளி தொகுதி செயலாளர், மற்றும் கிருட்டிணகிரி மாவட்ட பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.


முந்தைய செய்திஅனிதா மரணத்திற்கு நீதிகேட்டு நெய்க்காரப்பட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகன்னட எழுத்தாளர் கௌரி லங்கேஷ் படுகொலை குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிய வேண்டும் : சீமான் வலியுறுத்தல்