மந்தித்தோப்பு மலை பகுதியில் விதை பந்து தூவும் நிகழ்வு – கோவில்பட்டி

171

தூத்துக்குடி வடக்கு மாவட்டம், கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி இளைஞர் பாசறை சார்பாக விதை பந்து தூவும் நிகழ்வு 24.09.2017 அன்று காலை 10மணியளவில் மந்தித்தோப்பு மலை பகுதியில் இளைஞர் பாசறைச் செயலாளர் ச.சேம்சு நிசாந்த் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தலைவர் மருதம் மா.மாரியப்பன் அவர்கள் முன்னிலை வகித்தார்.

மேலும் செபாசுடின் செல்வராசு, சட்டதரணி ரவிக்குமார், இரா.தங்க மாரியப்பன், சுகப்பிரியன், விசய், ராசத்துரை, செல்வம், குமார் ராசா, லோகநாதன், சங்கர், ராசேசு. பிரின்சு, கருப்பசாமி, அந்தோணி, பிரிட்டோ, மணிகண்டன் உள்ளிட்ட தொகுதி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மந்தித்தோப்பு மலை பகுதியில் விதைபந்துகளை தூவினர்.