தியாகத்தீபம் திலீபன் நினைவுநாள் : தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் – கோவில்பட்டி

47

நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக தெருமுனை கொள்கைவிளக்கப் பரப்புரைக்கூட்டம் 27-09-2017 அன்று கோவில்பட்டி நகரில் இரண்டு இடங்களில் நடைபெற்றது.

மாலை 7 மணியளவில் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரே நடைபெற்ற கூட்டத்தில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 30 ஆம் நினைவேந்தலை முன்னிட்டு வீரவணக்கம் செலுத்தி கூட்டம் துவங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு தொகுதித் துணைச்செயலாளர் அ.செண்பகராசு தலைமை வகித்தார் , தொகுதிச் செயலாளர் இராசேசு கண்ணா , பொருளாளர் தியாகராசன் , து.தலைவர்கள் மகேசு , இராமமூர்த்தி , தொழிற்சங்க செயலாளர் சங்கர் , தொகுதி இணைச்செயலாளர் மாரிமுத்து , இளைஞர் பாசறைசெயலாளர் அருண்குமார் , இணைச்செயலாளர் சந்தோசு , மாணவர் பாசறை இ.செயலாளர் மணி மற்றும் நகரச்செயலாளர் இ.மணிகண்டன் , தொகுதிப் பொறுப்பாளர் ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில இளைஞர்பாசறைச் செயலாளர் இசை.சி.ச.மதிவாணன் , மற்றும் தொகுதி கொள்கை பரப்புச்செயலாளர் முத்துக்கருப்பையா ஆகியோர் சிறப்புறையாற்றினர்

இந்நிகழ்வில் ஐயா புங்கன், கோவில்பட்டி நகரத் துணைத்தலைவர் பேச்சிமுத்து, ஒன்றியச்செயலாளர் ராசேசு,கயத்தார் நகரச்செயலாளர் கருப்பசாமி, கயத்தார் கிழக்கு ஒன்றியச்செயலாளர் தொட்டம்பட்டி பாலமுருகன், தெற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் சண்முகராசு, கழுகமலை நகர துணைத்தலைவர் சந்தணம், இணைச்செயலாளர் ஆனந்த்,இளைஞர் பாசறைசெயலாளர் முருகன் உட்பட நாம் தமிழர்கட்சி நிர்வாகிகள் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்