காவேரியாம்பூண்டி கிராமத்தில் கொடியேற்றும் நிகழ்வு – திருவண்ணாமலை தொகுதி

50

திருவண்ணாமலை தொகுதிக்கு உட்பட்ட காவேரியாம்பூண்டி கிராமத்தில் 10.09.2017 அன்று கட்சியின் கிளை கட்டமைப்பு மற்றும் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடந்தது. திருவண்ணாமலை தொகுதி செயலாளர் க. மாதவன் தலைமையில் கட்சி கொடியை தெற்கு மாவட்ட செயலாளர் கண்டியாங்குப்பம் ஜெ.கமலக்கண்ணன் அவர்கள் ஏற்றிவைத்து சிறப்பித்தார்.

இதில் தொகுதி தலைவர் ரஸ்கின் பால்ராஜ், இளைஞர் பாசறை செயலாளர் சசிகுமார், நகர மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியம், கீழ்ப்பென்னாத்தூர் தொகுதி செயலாளர் தமிழன் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் கட்சியின் மாவட்ட பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியை பாபு, சரவணகுமார், சதிஷ்குமார், சந்தோஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.