செங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

359

வீரத்தமிழச்சி செங்கொடி 6ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் – சீமான் வீரவணக்கவுரை | பொள்ளாச்சி (19-08-2017) | நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறை

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக்காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடி 6 ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை சார்பாக நேற்று 19-08-2017 சனிக்கிழமை, மாலை 5 மணியளவில் பொள்ளாச்சி, திருவள்ளுவர் திடலில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவுரையாற்றினார்.

முன்னதாக செங்கொடியின் உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்விற்கு. மாநில மகளிர் பாசறை செயலாளர் உமா மகேசுவரி தலைமை தாங்கினார். மாநில மகளிர் பாசறை செயலாளர் அமுதாநம்பி முன்னிலை வகித்தார். மேலும் மாநில ஒருங்கிணைபாளர்கள் அன்புத்தென்னரசன், ஆன்றோர் அவை மறத்தமிழ்வேந்தன், மகளிர் பாசறை செயலாளர்கள் சீதாலட்சுமி, இலக்கியா, கௌரி, உஷா, சுமித்ரா, தேவி, சரளா இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கல்யாணசுந்தரம், ஜெகதீசப்பாண்டியன், கொள்கைப் பரப்பு செயலாளர் திலீபன் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை ஈசுவரன் மற்றும் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் இடும்பாவனம் கார்த்திக் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பலர் கலந்துகொண்டனர். இப்பொதுக்கூட்டதிற்கு நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பொதுமக்களும் பெருந்திரளாக பங்கேற்றனர்.​