தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விவசாயிகளின் நிலங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நோக்கத்தோடு செயல்படும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் தொடர்முழக்கப் பட்டினிப் போராட்டம் 18/07/2017 செவ்வாய்கிழமை அன்று நடைபெற்றது. பட்டினி போராட்டத்தில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்தி கலந்து கொண்டு கண்டனவுரையாற்றினார்.
முகப்பு கட்சி செய்திகள்