நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

70

நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? : கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை (30-07-2017) | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் அரசு ஏன் அமையவேண்டும்? என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று 30-07-2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கமுதியில் (சிறுவர் பூங்கா அருகில்) நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றினார். பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக பசும்பொன் கிராமத்தில் உள்ள ஐயா முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு சீமான் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்தார்.

30-07-2017 சீமான் – செய்தியாளர் சந்திப்பு – பசும்பொன்

30-07-2017 கமுதி பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி