கட்சி செய்திகள்: 08-06-2017 காயிதே மில்லத் புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் – தாம்பரம் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி
பெருந்தமிழர் கண்ணியமிகு காயிதே மில்லத் அவர்களின் 122வது பிறந்தநாளையொட்டி புகழ்வணக்கப் பொதுக்கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நேற்று 08-05-2017 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் தாம்பரம் சண்முகம் சாலை அருகே நடைபெற்றது.
இப்பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், கலைக்கோட்டுதயம், மறத்தமிழ்வேந்தன், ஹுமாயுன், சஞ்சீவிநாதன், வாகைவேந்தன், அறிவுச்செல்வன், அமுதாநம்பி உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்..
இதில் காயிதே மில்லத் அவர்களுக்கு மலர்வணக்கம் மற்றும் புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இறுதியாக சீமான் புகழ்வணக்கவுரையாற்றினார்.