சுந்தரலிங்கனார் 252வது பிறந்தநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

67

பெருந்தமிழர் சுந்தரலிங்கனாரின் 252வது (17/04/2017)பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் தியாகராசன் மற்றும் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் சுந்தரலிங்கனாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு கலந்து கொண்டார்.

மேலும் மாவட்ட, நகர,ஒன்றிய,மாணவர் பாசறை,இளைஞர்பாசறை,தொழிற்சங்க நிர்வாகிகள்,வேளாண் பாசறை,கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்