கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக கல்லூரி முதல்வரிடம் மனு

87

அமைச்சர் தொகுதியின் அவலம்: கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி நிர்வாகச் சீர்கேடுகளை சரிசெய்யக்கோரி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக கல்லூரி முதல்வரிடம் மனு

கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரியில்
1. முதலாமாண்டு மாணவர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தரக்கோரியும்,
2. தேர்வு கட்டண உயர்வை கைவிடக்கோரியும்,
3. பற்றாக்குறையாக உள்ள பேராசிரியர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பக்கோரியும், நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட செயலாளர் இராசேசு கண்ணா, தலைமையில் இணைச்செயலாளர் தமிழ்ச் செல்வன் முன்னிலையில் கல்லூரி முதல்வர் அவர்களை சந்தித்து 25-03-2017 அன்று மனுகொடுக்கப்பட்டது. உடன் மாவட்ட துணைச் செயலாளர் செண்பகராசு, மாவட்ட துணைத்தலைவர் அந்தோணி, கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன், இணைச்செயலாளர் விசயராசு, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சந்தோசு, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் இராசேசு, கழுகுமலை நகர பொறுப்பாளர்கள் முத்துராமலிங்கம் மற்றும் மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின்னர் இதுகுறித்து மாவட்ட இணைச்செயலாளர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் பேசிகையில், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

இந்தக் கல்லூரி தற்போதைய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரால் கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

முந்தைய செய்திஅசோகமித்திரன் எழுத்துக்கள் காலம் தாண்டி நிற்கும் – சீமான் புகழாரம்
அடுத்த செய்திடெல்லியில் 17வது நாளாக நடைபெற்றுவரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்தில் சீமான் பங்கேற்பு