திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி

129

9-02-2017 திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் – திருத்தணி வீரத்தமிழர் முன்னணி

தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! நமது இன மூதாதை! முருகப் பெரும்பாட்டனுக்கு நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி முன்னெடுத்த திருமுருகப் பெருவிழா, இம்முறை ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணியில் (கமலா திரையரங்கம் அருகில்) இன்று 19-02-2017 ஞாயிற்றுக்கிழமை, மாலை 3 மணியளவில் திருமுருகப் பெருவிழாப் பேரணி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மரபுவழி சேவலாட்டம், சிவதாண்டவ இசை நிகழ்ச்சி, பறை இசை, பல்வேறு அரிய பெரிய மேதைகளின் கருத்துரைகள் உள்ளிட்டப் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பெருவிழாப் பேருரையாற்றினார்.

இதில் வீரத்தமிழர் முன்னணி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்களும் பங்கேற்றனர்.

திருமுருகப் பெருவிழாவின் தீர்மானங்கள்
தீர்மான எண் ஓன்று ;
குலதெய்வ வழிபாடே நமது பழைய மெய்யியல் வரலாற்றை மீட்கும் என வீரத்தமிழர் முன்னணி உறுதியாக நம்புகிறது. குலதெய்வ வழிபாடு என்பது தமிழனின் தொன்ம வழிபாடாகிய முன்னோர் வழிபாட்டின் வடிவம் என்பதை உணர்ந்த நிலையில் தமிழகம் எங்கும் குலதெய்வ வழிபாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆளும் அரசிற்குக் கோரிக்கை வைக்கிறது. மேலும் குலதெய்வ வழிபாட்டின் போது ஆரிய வேத காரியங்கள் எதுவும் இல்லாமல் தமிழர் மரபுவழியே வழிபாட்டை நடத்தவும் வழிபடுவோருக்கு வேண்டுகோள் வைக்கிறது. தமிழகத்தின் பெரும்பாலும் குலதெய்வ வழிபாட்டு மாதமாக ஆடி மாதத்தையும், குறிப்பாக ஆடி 18 முதல் ஆடி 28 முடியத் தேதிகளில் குலதெய்வ வழிபாடு நடத்துவதால் ஆடி 18 முதல் 28 வரை உள்ள பத்து நாட்களை “குலதெய்வ வழிபாட்டு நாளாக” வீரத்தமிழர் முன்னணி பேரறிவிப்பு செய்கிறது.
தீர்மான எண் இரண்டு ;
ஆதி தமிழனிடம் சாதி இல்லை, ஐந்திணை ஒழுகலாற்றில் தினை ஒழுக்கம் வகுத்து, அவரவர் செய்யும் தொழிலை உயர்வு தாழ்வு காணாமல் பெருமையுடனும் மகிழ்வுடனும் செய்து வந்துள்ளனர். ஆனால் இடையில் வந்த சாதி தமிழர் தினை ஒழுக்கத்தில் உயர்வு தாழ்வு வகுத்து நம்மைப் பிரித்து வைத்தது. எனவே தமிழர் மரபின் பண்டைய தினையொழுக்க மீட்பே சாதிமத ஒழிப்பிற்கு வழிகோலும். எனவே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் , பாலை என ஐந்து தினையொழுக்கத்தையும் மீட்கும் வகையில், அந்தந்த தினையொழுக்கம் சாந்த நிலப்பகுதியில் தினையொழுக்க விழா நடத்தப்படும். ஒரு வருடத்தில் ஐந்து தினை ஒழுக்கத்தின் விழாவும் வருடந்தோறும் தடைப்படும். அந்த வகையில் வருகின்ற சித்திரை மாதத்தில், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி ஆகிய மண்டலத்திற்கு உட்பட்டு, பாலை நிலத்திற்கு உரிய “கொற்றவை விழா” நடத்தி, அந்த நிலத்தின் அடையாளமாக அனலால் அநீதி எரித்த எண்கள் வீர பெரும்பாட்டி கண்ணகியைப் போற்றும் வகையில் “கண்ணகி பெருவிழா” நடத்தப்படும். அதேபோல, மாயோன் விழா (கோவை, ஈரோடு, நீலகிரி பகுதிகளில்), நெய்தல் விழா (தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகளில்), மருதவிழா (தஞ்சை, திருவாரூர், நாகை பகுதிகளில்) நடத்தப்பட்டும்.
தீர்மான எண் மூன்று
தனித்த ஆசிரமங்கள் சொத்துக்களும், கோவில் சொத்துக்களும், அதை நிர்வகிக்கும் அறங்காவலர்களுக்கே சொந்தம் என்றும், இந்து சமைய அறநிலைய துறை என்ற அரசின் துறையை கலைக்க வேண்டும் என்று கோவை தாயானந்த சுவாமிகள் தொடர்ந்த வழக்கில் அதற்கு எதிர் தரப்பாக வீரத்தமிழர் முன்னணி தன்னையும் இணைத்துக்கொண்டு போராடி வருகிறது. இந்த வழக்கின் வீரத்தமிழர் முன்னணி வழக்கறிஞருக்கு எதிர்தரப்பாக சுப்ரமணிய சுவாமி இருப்பது குறிப்பிட தக்கது. இந்த வழக்கின் இறுதி விசாரணை வருகின்ற 27 ஆம் தேதி வருகிறது, இந்த இறுதிக்கட்ட விசாரணை பொறுத்தே தீர்ப்பு அமையும் என்பதால் வீரத்தமிழர் முன்னணி இந்த வழக்கில் வெல்லும் என உறுதியாக நம்புகிறது. இதே சட்டத்தின் பாதையில், “தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை விடவேண்டும்” என்பதையும், “குறிஞ்சாக்குளத்தில் அன்னை காந்தாரிக்கு கோவில் அமையவேண்டும்” என்பதையும் வலியுறுத்தி வீரத்தமிழர் முன்னணி சார்பாக தமிழக அரசியின் செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு போற்றவைகளுக்கு மனு கொடுத்து அரசு தரப்பு பதிலுக்காகக் காத்திருக்கிறது. பதில் எதிராக வரும் சமயத்தின் நீதிமன்றம் வரை சென்று வீரத்தமிழர் முன்னணி தனது கோரிக்கையில் வெற்றிபெறும் என்று பிரகடப்படுத்துகிறது.
தீர்மான எண் நான்கு :
அரியலூரில் நந்தினி எனும் சகோதரியை நயவஞ்சகமாக ஏமாற்றிக் கூட்டு பாலியல் பலாத்தாகரம் செய்து கொடுமையாக கொன்று இருப்பவர்கள் கைதுசெய்யப்பட்டு இருக்கும் இந்த நிலையில் அவர்களை பிணையில் விடாமல் அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்டனைக்கு உரிய குற்றம் மிகவும் கடுமையானதாக இருக்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி கோரிக்கை வைக்கிறது. இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் மதவாத சக்திகளின் தலையீடு இந்த வழக்கின் விசாரணையில் அனுமதிக்க கூடாது எனவும் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் எண் ஐந்து :
தமிழர் இறை முருகனின் கோவில்களில் ஆரிய மயமாக்கல், பண்டைய மூலக்கதைகளை திரித்து சமஸ்கிருத மயமாக்கல் எனத் தமிழர்களின் பண்டைய நாகரிக ஆவணங்கள் கையகப்படுத்தி ஆரிய மயமாக்களை செய்ய மத்திய அரசை மாநில அரசின் இந்து சமைய அறநிலையத் துறை அனுமதிக்கக் கூடாது. மேலும் மதுரை கீழடி அகழ்வாராச்சியை தொடர்ந்து நடத்தி, பெறப்படும் ஆவணங்கள் தமிழக அரசின் தொல்லியல் துரையின் கண்காணிப்பில் வைத்து, ஏற்கனவே பெறப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் படியும் வீரத்தமிழர் முன்னணி வேண்டுகோள் வைக்கிறது. கோவில் சீரமைப்பு என்ற பெயரில் தமிழரின் கட்டிட கலைகள், கல்வெட்டு ஆவணங்கள், தமிழர் பழமை கூறும் வரலாற்று ஆவணங்கள் அனைத்தும் சிறுக, சிறுக ஆளும் ஆரிய அதிகார வர்க்கத்தினால் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே கோவில் மற்றும் கல்வெட்டு சீரமைப்பிற்கு முன்னதாக அனைத்து பழைய புராதான சின்னங்களும் ஆவணப்படுத்த வேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் போகர் வழிவந்த புலிப்பாணி சாமிகள் தொடர்ந்த வழக்கில் சுமார் 30 வருட போராட்டத்திற்கு பிறகு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தால், பழனி உள்விவகார துறையை நிர்வாகிக்கும் பொறுப்பினை புலிப்பாணி சாமிகளுக்கே வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை உடனே அரசு செயல்படுத்த வீரத்தமிழர் முன்னணி கோருகிறது.
தீர்மான எண் ஆறு ;
தமிழ்நாட்டின் மண்வரலாறு, பழந்தமிழ் வீரம் இவைகளோடு கூடிய கிராம கோவில்கள் அனைத்தும் சிறுக சிறுக தமிழ் பூசாரிகளிடம் இருந்து பார்ப்பனர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டுவருகிறது. இந்தநிலையை தடுக்கவேண்டும். கிராமங்களில் இருக்கும் அனைத்து குல தெய்வ கோவில்களை நிர்வாகிக்கும் உரிமையினை அந்த கோவில்களை நிர்வகித்துவந்த கிராம பூசாரிகளுக்கே உரியது என்றும், அந்த கோவில்களில் பணிபுரியும் கிராமபூசாரிகளுக்கு மாத ஊதியத்தை தொடர்புடைய துறை வழங்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி வலியுறுத்துகிறது. இதுவரை கோவில்களில் பணிசெய்த வயது முதிர்ந்த கிராம கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியத்தை அரசு வழங்கவேண்டும் என்று வீரத்தமிழர் முன்னணி தீர்மானம் நிறைவேற்றுகிறது.

 

[WRGF id=41799]