வர்ற பொங்கலுக்கு என்ன செய்ய சொல்லடா! – அறிவுமதி | சீமான்

28

செத்த பயிர
பாத்துபுட்டு
செத்து
விழுறான்
விவசாயி!

ஒத்த
பயலும்
பாக்க
வரல
ஓட்டுப்
பொறுக்கும்
படுபாவி!

உழவு செஞ்சு
பாத்த
உடம்பு
ஒரு நொடியில
சாஞ்சு
போச்சு!

எழவு சொல்ல
போன
வீட்டில்
எழவு
கேக்க
லாச்சு!

கெண்ட குஞ்சு
மேஞ்ச
வயலில்
சீமக்
கருவ
தழஞ்சது!

யான கொண்டு
போரடிச்ச
சோழ மண்ணு
முடிஞ்சது!

எண்பதுக்கும்
மேல
உடலு
சாஞ்சி
கெடக்கு
பாரடா!

இதுக
மேல
நடந்து
வந்து
இந்தியன்னு
கூறடா!

மீனு தின்ற
கொக்கு
இன்று
வெட்டுக்
கிளிய
தின்னுது!

ஆத்து மணல
அள்ளித்
தின்ன
அரசு
என்ன
பண்ணுது?

தஞ்ச மண்ணு
தருசாச்சு!
பஞ்சம்
ரொம்ப
பெருசாச்சு!

பொங்கித்
தின்ன
கருக்காவும்
இல்லடா!

வர்ற
பொங்கலுக்கு
என்ன
செய்ய
சொல்லடா!

– விடுதலைப் பாவலர் அறிவுமதி